அமெரிக்க அரசுத் தலைவராகப் புதிதாக பதவி ஏற்ற டொனல்ட் டிரம்ப் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 விழுக்காடு சுங்க வரி வசூலிப்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜனவரி 22ஆம் நாள் கூறுகையில், புதிதாக வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையாக, பிரிக்ஸ் நாடுகள், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி ஆகியவற்றை ஆதரித்து வருகின்றன. மேலும் சீனா, பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, உலகப் பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விருப்பம்
You May Also Like
More From Author
ஒரே சீனா கொள்கை பொது மக்களின் விருப்பம்: சீனா
May 28, 2024
மூன்று நாடுகளை இணைக்கும் இருப்புப் பாதை திட்டப்பணி
June 7, 2024