பற்றி எரியும் மேற்கு வங்கம்.. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை

Estimated read time 0 min read

பற்றி எரியும் மேற்கு வங்கம்.. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை : திரௌபதி முர்மு எடுக்கும் முக்கிய முடிவு.. பரபரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது, அந்த நிலையில் அங்குள்ள 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாததாக பிரச்சனை வெடித்து வருகிறது.

அதற்கு காரணம் ஆளும்கட்சி பிரமுகரான ஷாஜகான் ஷேக், அதாவது அக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அவர் மீது பிகார் எழுந்துள்ளது. அதுவும் பட்டியலின வகுப்பை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இது தவிர பட்டியலின மக்களின் நிலத்தை அபகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வெளியே சொன்னால் பல்வேறு விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவிம் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதனிடையே ஷாஜகான் ஷேக் வீட்டில் கடந்த மாதம் ரேஷன் ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்த சென்றது. அப்போது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை தடுத்து தாக்கிய நிலையில் ஷாஜகான் ஷேக்கை தப்பவிட்டுள்ளனர்.

இந்தநிலையில் தலைமறைவாக உள்ள ஷாஜகான் ஷேக் மீது பெண்கள் புகார்கள் கொடுத்து வருகின்றனர். ஆளும்கட்சி நிர்வாகி என்பதால் போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஷாஜகானின் கூட்டாளியான ஷிபாபிரசாத் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையை போராட்டக்காரர்கள் எரித்ததால் பதற்றம் நீடிக்கிறது.

இதை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு கிடைத்த ஆயுதமாக, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்தனர். போராட்டம் வெடித்ததது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று சந்தேஷ்காலி கிராமத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தில் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி அவர்கள் விசாரித்தனர்.

தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் மற்றும் உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அறிக்கை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் ஒப்படைத்தார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author