வார இராசிப்பலன் ( 03-08-2025 முதல் 09-08-2025 வரை)

மேஷம் :

இராசிநாதன் 6ல் மறைவதால், கோபம் குறைந்து விவேகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனை செயல்பாட்டில் தயக்கம் இருக்கும்.

மருத்துவ இராணுவ காவல் துறையில் உள்ளவர்களுக்கு சற்று மன உளைச்சல்கள்,  வேலை பளு அதிகமாக காணப்படுவீர்கள்.

பாக்கியஸ்தானத்தை குருவும் சுக்ரனும் சேர்ந்து பார்ப்பதால் நீண்ட நாட்கள் தடைபட்ட எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடி வரும்.

முயற்சிகள் அனைத்தும் கைகூடி வரும்.

திங்கள் செவ்வாய் கிழமை சந்திராஷ்டம்ம் ஆகையால் புதிய முயற்சிகள் முடிவுகள் எடுப்பதை தவிர்கவும். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது ஏனெனில் சந்திரன் பொளர்ணமியை நோக்கி செல்கிறது.

தொழிலில் நல்ல மேன்மை ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், தன வரவு நன்றாக இருக்கும்.

அனுகூலமான நாட்கள், 8,9

ரிஷபம் :

இராசிநாதன் சுக்ரன் இராசிக்கு இரண்டாம் இடத்தில் குருவுடன் இணைந்து இருப்பதால் தெளிந்த சிந்தனையுடன் உறுதியான செயல்திறனுடன் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது.

வார மத்தியில் சந்திராஷ்டம்ம் இருந்தாலும் குரு சுக்ரன் பார்வையால் நிவர்த்தி ஆகி திடீர் அதிர்ஷ்டம் பண வரவு போன்றவை கிடைக்கலாம்.

குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

வார இறுதியில் பாக்கியஸ்தானத்தில் பூரண சந்திரன் இருப்பதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் நிறைவேறலாம்.

வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்லவும். அலைச்சல் நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலைகள் ஏற்படலாம்.

தனஸ்தானத்தில் இரு சுபர்கள் சஞ்சரிப்பதால் தன வரவு நன்றாக இருக்கும்

அனுகூலமான நாட்கள் – 3.4

மிதுனம் :

இராசியில் குரு சுக்ரன் இணைவு நல்ல ஆரோக்கியம், நல்ல சிந்தனை நல்ல செயல்திரனுடன் காணப்படுவீர்கள்.

வார மத்தியல் இராசியை சந்திரன் பார்ப்பதும் மிகவும் சிறப்பான அம்சம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தன வரவும் நன்றாக இருக்கும்.

வார இறுதியில் சந்திராஷ்டம்ம் ஆயினும் சந்திரன் பொளர்ணமி அமைப்பில் இருப்பதால் சுபமாகவே இருக்கும்.

தொழிலில் இலாபம் குறைந்து காணப்படலாம், நீண்ட நாட்கள் எதிர்பார்த்த விஷயங்கள் தாமதப்படலாம்.

தொழிலில் வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம்.  புதிய கடன்கள் வாங்கும் முயற்சி கைகூடி வரும்

குழந்தைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் 3,4,5,6,7

கடகம் :

இராசிக்கு 12ம் இடத்தில் இரு மாபெரும் சுபர்கள் குரு சுக்ரன் சஞ்சரிப்பரால் சுப விரையங்கள் ஏற்படலாம்.

வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம்.

புதிய கடன்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வார இறுதியில் சந்திரன் இராசியை பார்ப்பது நல்ல அமைப்பு, தன்னம்பிக்கையுடன் நல்ல சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.

திருமண சுப காரியங்கள் முயற்சி தாமதப்படலாம்.

குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

தொழிலில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

வண்டி வாகனம் வீடு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அனுகூலமான நாட்கள் 5,6,7,8,9

 

சிம்மம் :

இராசிநாதன் சூரியன் மற்றும் தன இலாபாதிபதி பதனும்  12ல் மறைந்து இருப்பதால் தன்னம்பிக்கை சிறிது குறைந்து காணப்படுவீர்கள். வார இறுதியில் சந்திரன் பார்வையால் சுபத்துவமாகிறது.

வாக்குஸ்தனத்தில் செவ்வாய் பகை பெற்று சஞ்சரிப்பதால் கோபத்துடன் காணப்படுவீர்கள். எதிலும் பொருமை நிதானத்துடன் செயல்படுவது நற்பலனைத்தரும்.

தாயார் மூலம் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இலாபம்  ஏற்படும்.

தொழில் நன்றாக இருக்கும். இலாபமும் நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெரும்.

புதிய கடன்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது. நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்லவும். முயற்சிகள் கைகூடி வரும்.

அனுகூலமான நாட்கள் : 8.9

 

கன்னி :

இராசிநாதன் புதன் 11ல் சூரியனுடன் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் வார தொடக்கத்தில் இலாபம் குறைந்து காணப்பட்டாலும், வார இறுதியில் சந்திரனன் அதி யோகத்தால் தொழிலில் இலாபம் மேம்படும்.

இராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் அவசரம் எரிச்சல் கோபத்துடன் செயல்படுவீர்கள்.

பொருமை நிதானத்தை கடைப்பிடிப்பது  நல்லது.

தொழிலில் நல்ல மேன்மை காணப்படும். புதிய தொழில்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

தாய் வழி ஆதரவு நன்றாக இருக்கும், அவ்வப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்படலாம். வண்டி வீடு சம்பந்தமாக செலவுகள் ஏற்படலாம். புதிய வண்டி வாகனம் வீடு வீட்டு உபயோக போருட்களை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

நீண்ட நாட்கள் எதர்பார்த்த விஷயங்கள் வார இறுதியில் நிறைவேறும் அமைப்பை உள்ளது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களுடன் உறவு மேம்படும்.

அனுகூலமான நாட்கள் – 3,4

 

துலாம் :

இராசி மற்றும் 8ம் அதிபதி பாக்கியஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிப்பதால் நல்ல சிந்தனை செயல்திறனுடன் காணப்படுவீர்கள். தந்தை வழி திடீர் அதர்ஷ்டங்கள் தன வரவு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

முயற்சிகள் அனைத்தும் கைகூடி வரும் நல்ல வாரம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான வாரம்.

எந்த செயலையும் தைரியத்துடன் செய்வீர்கள்.

வாரத்தின் முற்பகுதியில் நல்ல தன வரவு இருக்கும்.

இராசிக்கு 7 ம் அதிபதி 12 ல் மறைவதால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுதல் நலம். கணவர் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

புது வீடு வண்டி வாகனம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வதிர்பார்த்த விஷயங்கள் வாரத்தின் இறுதியில் நிறைவேற சாதகமான வாரம்.

தொழிலில் நல்ல மேன்மை இருக்கும். வார இறுதியில் நல்ல இலாபம் ஏற்படும்.

அனுகூலமான நாட்கள் – 5,6,7

 

விருச்சிகம் :

இராசிநாதன் செவ்வாய் இலாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது நற்பலனைத்தரும் தல்ல வீரமாக அமைகிறது.

இரு மாபெரும் சுபர்கள் தன குடும்ப வாக்குஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல தன வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் வாரம்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கணவர் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

திருமண சுப நிபழ்ச்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

திடீர் அதர்ஷ்டங்கள் தன வரவு ஏற்பட சாதகமான வாரம்.

வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு பயணத்தின் மூலம் நல்ல இலாபம் ஆதாயம் ஏற்படலாம்.

தந்தை ஙழி தொழில் மூலமாக நல்ல இலாபம் ஏற்படலாம்.

வார இறுதியில் சந்திரன் பாக்கியஸ்தானத்தை பார்ப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடிநாக நிறைவேறும்.

அனுகூலமான நாட்கள் 3,4,8,9

 

தனுசு :

இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் சுக்ரனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், கணவர் மனைவி இறவு நன்றாக இருக்கும்.

திருமண சுப நிகழ்ச்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு சாதகமான வாரம்.

குரு சுக்ரன் இணைந்து இராசியை பார்ப்பது மிகவும் சிறப்பான அமைப்பு. நல்ல சிந்தனை செயல்திறனுடன் காணப்படுவீர்கள். எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்வீர்கள்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வார ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் வார இறுதியில் தன வரவு அமைப்பு நன்றாக இருக்கிறது.

தந்தை மற்றும் தொழில் சம்பந்தமான சில சஞ்சலங்கள் ஏற்படலாம்.

இராசியை செவ்வாய் பார்ப்பதால் எதிலும் அவசரமாக கோவத்துடன் செயல்படுவீர்கள், பொருமை நிதானம் தேவை.

அனுகூலமான நாட்கள் – 5,6.7

 

மகரம் :

இராசிக்கு 5,10 ம் அதிபதி சுக்ரன் குருவுடன் இணைந்து 6ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் வார இடையிலும் இறுதியிலும் பூரண சந்திரன் பார்வையால் தொழிலில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் அதை செம்மையாக செய்து முடிப்பீர்கள்.

புதிய கடன் வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சுப விரையங்கள் ஏற்படும் நல்ல வாரமாக அமைகிறது.

நீண்ட நாட்கள் முயற்சி செய்த எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும்.

வார இறுதியில் இராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால் நல்ல சிந்தனை செயல்திறனுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

புதிய முயற்சிகள் சற்று தாமதப்படலாம்.

அனுகூலமான நாட்கள் – 3,4 ,8,9

 

கும்பம் :

இராசிக்கு 5ம் இடத்தில் குரு சுக்ரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு. குல தெய்வ அனுக்ரகம் கிடைக்கும், கல தெய்வ கோவில் வழிபாடு செய்ய சாதகமான வாரம்.

சிந்தனையில் தெளிவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி நிலவும்.

வார மத்தியில் எதிர்பார்த்து வந்த விஷயங்கள் நிறைவேற சாதகமாக உள்ளது. தொழிலில் நல்ல இலாபம் ஏற்படும்.

தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய தொழில் கிளை துவங்கவதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

வார இறுதியில் சுப செலவுகள் ஏற்படலாம்.

இராசி நாதன் வக்ர கதியில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் வேகமாக முடிப்பீர்கள். பொதுவாக தன வரவு மத்தியமாக இருக்கும்.

குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானம் பொருமை அவசியம்.

புதிய கடன் வாங்கும் முயற்சி வார இறுதியில் சாதகமாக இருக்கும்.

நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் – 3,4,5,6,7

 

மீனம் :

இராசிக்கு 4ம் இடத்தில் இரு சுபர்கள் சஞ்சரிப்பதால் தாய் வழி ஆதரவு நன்றாக இருக்கும். தாயார் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய வண்டி வாகனம் வீடு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

 தொழிலில் நல்ல மேன்மை ஏற்படும். புதிய தொழில் கிளைகள் துவங்கும் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

வார இறுதியில் குல தெய்வ வழிபாடு செய்ய சாதகமாக இருக்கும்.

குடும்பத்தில் அனுசரித்து செல்லுதல் நல்லது. இராசியை செவ்வாய் பார்ப்பதால் எந்த காரியத்தையும் வேகமாக முடிக்க முயல்வீர்கள். கோபம் அதிகமாக காணப்படும். நிதானம் பொருமை அவசியம் வேண்டும்.

வார இறுதியில் தன வரவு நன்றாக இருக்கும்.

சனி வக்ர நிலையில் இருப்பதால் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி தாக்கம் சற்றே குறைந்து காணப்படும்.

வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் பயணம் ஆதாயத்தை கொடுக்கும். சுப விரையங்கள் ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் : 5.6.7.8.9

 

சுபம் !!!

 

தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்

9566620842 / 9944443215

astromanibharathy@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author