இந்திய ரயில்வே ஒரு புதிய பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பயணிகள் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில் தங்கள் ஸ்டேஷனிற்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பெறலாம்.
இந்த வசதி தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் எட்டு வந்தே பாரத் ரயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, ஒரு ரயில் அதன் தொடக்க நிலையத்திலிருந்து புறப்பட்டதும், வழித்தட நிலையங்களில் இருந்து அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.இப்போது, பாசஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டத்தில் (PRS) ஏற்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகளால், எந்தவொரு நிறுத்தத்திலிருந்தும் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை காலியாக உள்ள இருக்கைகள் தற்போதைய புக்கிங்களுக்கு திறந்திருக்கும்.
வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
