வகுக்கப்பட்டு வருகின்ற 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்கான வரைவுத் திட்டம் குறித்து இணையப் பயன்பாட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தொடர்புடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில் உத்தரவிட்டார்.
இந்த முறை, இணையப் பயன்பாட்டாளர்களின் தொடர்புடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைச் சேகரிக்கும் நடவடிக்கையில் பெருமளவில் நடைபெற்றது. இது, முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பான மாதிரியாகும். இதில் மதிப்புள்ள கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அதிகம் பெறப்பட்டு உள்ளன. பல்வேறு நிலை கட்சிக் கமிட்டிகள் மற்றும் அரசாங்கங்கள், மக்களை மையமாகக் கொண்டு, பரந்தளவில் மக்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு, மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, மக்களின் அறிவுத்திறனைச் சேகரித்து, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்தி, அருமையான வாழ்க்கை மீதான மக்களின் விருப்பங்களை தொடர்ந்து நனவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கோரிக்கை விடுத்தார்.
இது வரை இணையம் மூலம் சுமார் 31 இலட்சத்து 13 ஆயிரம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வகுக்கப்பட்டு வருகின்ற 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்கான வரைவுத் திட்டத்துக்கு இவை பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.