பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
“அடுத்த துணை ஜனாதிபதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எதிர்க்கட்சித் தலைவர்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?
