வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ரெமல் என்றால் அரபு மொழியில் மணல் என்று அர்த்தமாகும்.
இந்த பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் முதல் பருவமழைக்கு முந்தைய சூறாவளி இதுவாகும்.
வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு பிராந்தியங்கள் பெயரிடும் முறையைப் பின்பற்றி, ஓமன் இந்த பெயரை வழங்கியுள்ளது.
மே 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.