சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ அன்டோனியோ ரூபியோவுடன் அக்டோபர் 27ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீரான, நிதானமான மற்றும் தொடரவல்ல சீன-அமெரிக்க உறவு, இரு நாடுகளின் நீண்டகால நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது என்றார். இரு தரப்பும் இணைந்து செயல்பட்டு, சீன-அமெரிக்க உயர்நிலைப் பரிமாற்றத்துக்கு ஆயத்தம் செய்து, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
ரூபியோ கூறுகையில், அமெரிக்க-சீன உறவு, உலகளவில் மிக முக்கியமான இரு தரப்புறவாகும். உயர்நிலை பரிமாற்றத்தின் மூலம் உலகத்துக்கு ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
