15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் வெளிநாட்டு திறப்பை விரிவாக்கும் சீனா

சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டம் அண்மையில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் உயர் நிலை வெளிநாட்டு திறப்பு அளவை விரிவாக்குவது குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் புதிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் இந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு திறப்பு என்பது, சீனப் பணியுடைய நவீனமயமாக்கத்தின் தெளிவான அறிகுறி ஆகும். உலகின் பல்வேறு நாடுகளுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, கூட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பது இந்த அமர்வில் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சீனாவின் வெளிநாட்டு திறப்புக்கு, வணிகப் பொருட்கள் மற்றும் காரணிகூறுகளின் புழக்கத்தை விட, விதி, கட்டுபாட்டு நடவடிக்கை மற்றும் தரநிலையின் திறப்பையும் குறிக்கிறது. சொந்த விதிகளை சர்வதேச நிலையை வெகு விரைவில் எட்ட செய்தல், தரநிலைக்கான பரஸ்பர அனுமதி ஆகியவற்றின் மூலம், பன்னாட்டு இணைப்பை அதிகரிப்பதை இது குறிக்கிறது.

சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், வெளிப்படை, நிலைத்தன்மை மற்றும் எதிர்பார்க்கக்கூடிய அமைப்புமுறை சூழ்நிலையை உருவாக்க சீனா தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

தவிர, பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தரக் கட்டுமானத்தை  முன்னேற்றுவது ஆகியவை குறித்து இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டது. சொந்த நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் வளர்ப்பதோடு, ஒரு அருமையான உலகத்தின் உருவாக்கத்தை சீனா செயலாக்க முறையில் முன்னேற்றி வருகின்றது என்பதை இது குறிக்கிறது. ஏபெக், பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்புவாத அமைப்புமுறைகளின் ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகள் காலப்போக்கில் முன்னேறுவதை ஊக்குவிக்கவும், உலகளாவிய தெற்கு நாடுகள் கருத்துக்கள் வெளிப்படுத்தும் உரிமை மற்றும் பிரதிநிதி தன்மையை அதிகரிக்கவும் சீனா செயல்பாட்டு வருகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author