ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கிக்கான (ஏ.ஐ.ஐ.பி)செயற்குழுவின் 10ஆவது ஆண்டு கூட்டம் ஜூன் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங் மாநகரில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 100 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 3500க்கும் மேலான விருந்தினர்கள் கலந்துகொள்வர். இவ்வாண்டு கூட்டத்தை உபசரிக்கும் நாடாக சீனா விளங்குகிறது.
தொடரவல்ல வளர்ச்சி வாய்ந்த அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இக்கூட்டம் முக்கியமாக கவனம் செலுத்தி விவாதிக்கும். இக்கூட்டத்தின் போது, பொது மக்களுக்காக 17 தலைப்புகள் சார்ந்து கருத்தரங்குகள் நடத்தப்படும். இவ்வங்கியின் துணைத் தலைவரும் தலைமைச் செயலாளருமான லூ சூஷெ 11ஆம் நாள் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
57 உறுப்பு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏ.ஐ.ஐ.பியின் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. அதனுடன் உலகளவில் 81 விழுக்காட்டு மக்கள் தொகையையும் 65 விழுக்காட்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் இவ்வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.