செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இளையராஜாவைப் பாராட்டிப் பேச இருக்கிறார்கள்.
சிம்பொனி இசை மூலம் இசையுலகில் வியப்பலைகளை ஏற்படுத்தி உள்ளார் இளையராஜா. உலகம் முழுவதிலும் இருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாபெரும் விழா நடைபெறுகிறது. இந்த ‘இசைத் திருவிழா’வுக்கு மொத்தத் தமிழ்த் திரையுலகமும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தித் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரக் கலைஞர்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.