லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர்.
‘உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மராத்தான்’ என்று அழைக்கப்படும் லடாக்கின் பாங்காங் உறைந்த ஏரி மராத்தான் இரண்டாவது பதிப்பு பிப்ரவரி 20 அன்று நடந்தது.
லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் நிர்வாக யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸின் ஆதரவுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
21 கிமீ மற்றும் 10 கிமீ என இரண்டு பிரிவுகளில், 120 ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.
விளையாட்டுத்துறைச் செயலர் ரவீந்தர் குமார், சுஷுல் தொகுதி கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.