பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் வரலாற்றில் ஜனநாயகத்திற்கு எதிராகக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபர் இவர்தான். இந்தத் தீர்ப்பு, டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடுமையான பின்னடைவைக் கொடுத்துள்ளது.
பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெரும்பான்மை முடிவின் (4-1) அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
போல்சனாரோ, ஆயுதமேந்திய குற்ற செயல்முறையில் பங்கேற்றது, ஜனநாயகத்தை வன்முறையால் ஒழிக்க முயற்சித்தது, ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்தது, மற்றும் அரசு சொத்துக்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட ஐந்து குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார்.
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
