நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.
இவருடன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தித் திணிப்பை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 9 அன்று ஜனநாயகன் படமும் திரைக்கு வர உள்ளதால், சினிமா ரசிகர்களுக்கு அடுத்த பொங்கல் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
