தமிழர்களின் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் காலத்துத் தொன்மையான உழைப்பையும், கல்லணை, தஞ்சை பெரிய கோவில் போன்ற காலத்தை மீறிய கட்டுமான அற்புதத்தையும் சொல்கிறபோதே, அவர்கள் எதையெதையெல்லாம் மறந்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் பொது அக்கறையின் கீழ் தொகுக்கப்பட்டு உருவானதுதான் “தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்” என்கின்ற இந்த நூல்.
தமிழர்களுடைய கலைகள், அவர்களுடைய அந்தக் காலத்திய நுட்பமான உழைப்பு, கட்டுமானத் திறன் எல்லாம் காலத்தின் போக்கில் எப்படியெல்லாம் உருமாறிப் போயிருக்கின்றன அல்லது தேய்ந்திருக்கின்றன என்கிற ஆதங்கமும் இந்த நூலில் வெளிப்பட்டிருக்கிறது.
இதைப்படிக்கும் தமிழர்களின் நேற்றைய பிரமிப்பையும் உணரலாம். இன்றைய சரிவையும் மறதியையும் கூட உணரலாம். இதை, காலத்தின் தேவைக்கருதி உணர்த்துவதுதான் இந்நூலின் மையம்.
பரிதி பதிப்பகம் சார்பில் உருவாகியுள்ள இந்த நூல், ஜோலார்பேட்டையில் நாளை (14.09.2025) வெளியிடப்பட உள்ளது.
தொடர்புக்கு – 72006 93200
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்!
