தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், தனது அடுத்த படமான “நான் தான் சிஎம்” என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தை அவரே எழுதி இயக்குவதுடன், சிங்காரவேலன் என்ற முதலமைச்சர் வேட்பாளர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான வாசகத்துடன் வெளியிட்டார்.
“தேர்தலில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம் என்பது ஜனநாயக உரிமை. நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைப்பது உங்கள் கடமை.
உட்கார்ந்து முதலமைச்சர் நாற்காலியில் போடும் முதல் கையெழுத்து, இந்த சீட்டில் இனி யாரும் உட்காரக் கூடாது என்பதுதான்!” என்ற பதிவுடன் இந்த போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.
நான் தான் சிஎம்; புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் பார்த்திபன்
