பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல், உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
71 வயதான நடிகர் மதன் பாப் எனும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது, அங்கு பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் மதியம் தொடங்கியது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தகனத்துடன் முடிந்தது.
நடிகர் மதன் பாப் உடல் தகனம் செய்யப்பட்டது
