2025ஆம் ஆண்டுக்கான உலக புத்தாக்கக் குறியீட்டை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 16ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னணியில் வகிக்கின்றன. சீனா முதல் 10 நாடுகளில் இடம் பிடித்து நடுத்தர வருமானமுடைய நாடுகளில் முன்னணியில் வகித்துள்ளது.
மேலும், ஆய்வுக்கான செலவு, உயர் அறிவியல் தொழில்நுட்ப ஏற்றுமதி, புத்தாக்கப் பொருட்களின் உற்பத்தி ஆகிய துறைகளில் சீனா வலுவான போக்கினை நிலைநிறுத்தியுள்ளது. சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட நடுத்தர வருமானமுடைய நாடுகளின் தரவரிசை தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.