சென்னை : சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் இன்று (செப்.19) வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இது தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை திறந்து வைத்தார. இது, சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.574 கோடியில் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.