மனிதன் இயற்கையோடு இணக்கமாக வாழ்வது என்ற நவீனமயமாக்கலை அடைய சீனா இலக்கு
சமீபத்தில், சீனாவின் யுன்னான் மாநிலத்தின் ஷிச்சுவாங்பன்னாவில் ஆசிய யானைகள் குழுவாகச் சேர்ந்து மீண்டும் வீதியில் அலைந்து திரிந்தன. உள்ளூர் காவற்துறை மற்றும் கண்காணிப்பாளர்களின் உதவியுடன், 42 யானைகள் வீதியில் உலா சென்று இயற்கை பாதுகாப்பு மண்டலத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பின.
உள்ளூரில், வன விலங்குகள் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இத்தகைய காப்பீட்டு அமைப்பு, யுன்னான் மாநிலத்தால் முதன்முதலில் நிறுவப்பட்ட காப்பீட்டு அமைப்புமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 2023ஆம் ஆண்டில், இந்த அமைப்புமுறை, அழிவின் விளிம்பில் இருக்கும் வன விலங்கு மற்றும் தாவர உயிரினங்களின் சர்வதேச வர்த்தத்திற்கான உடன்படிக்கையின் செயலகத்தால் முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டது.
சீனாவில் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு எனும் கண்ணோட்டம், பொது மக்களின் மனதில் ஆழமாக வேரோடியுள்ளது. பசுமையான வளர்ச்சி, சீனாவின் உயர் தரமான வளர்ச்சிக்கான அடிப்படையாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து முன்னேற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. தெளிந்த நீர் மற்றும் பசுமை மலைகள் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்ற கோட்பாட்டை சீனா பின்பற்றி வருகிறது. இதன் வழிகாட்டலில், மனிதன் இயற்கையோடு இணக்கமாக வாழ்வது என்ற நவீனமயமாக்கலை அடைய சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.