பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் புரட்சி தலைவரான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஜக-அதிமுக கூட்டணி கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வந்த நிலையில், அதில் ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக அவரது தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் வெளியேறியதற்கு பின்னணியாக, அதிமுக-பாஜக கூட்டணிக்குள் தன்னை புறக்கணிக்கும் முயற்சிகள் தொடர்ந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய்யுடன் கூட்டணி ஏற்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “யாருடன் கூட்டணி என்பது பற்றிய முடிவு, நிலைமைக்கேற்ப ஆராய்ந்து தான் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் தமிழக அரசியலில் புதிய பரிணாமங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.