டெல்லி பல்கலைக்கழகத்தில் சினேகா தேவ்நாத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர் டெல்லியில் தங்கி இருந்து படித்து வந்த நிலையில் திடீரென கடந்த 7-ம் தேதி மாயமானார். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நதியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடைசியாக அந்த பெண்ணை சிக்னேச்சர் பாலத்தின் அருகே விட்டதாக ஒரு டாக்ஸி ஓட்டுனர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நதியில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே ஆற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.