இன்று மகா பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி சங்கமத்தில் புனித நீராடினர்.
மஹா மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் மஹா பூர்ணிமா, இந்துக்களுக்கு புனிதமான நாட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நாளில் பக்தர்கள் விஷ்ணு பகவானை வழிபட்டு, சத்யநாராயண விரதத்தை அனுசரித்து, பலர் க கங்கை நதியில் நீராடுவர்.
அந்த வகையில் இன்று மகா பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி சங்கமத்தில் புனித நீராடினர்.
மேலும் அங்கிருந்த பக்தர்கள் மண் விளக்குகளை ஏற்றி மகா பௌர்ணமியில் இறைவனை பிராத்தனை செய்தனர்.
மகா பூர்ணிமா ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சத்யநாராயண விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், மக்கள் சந்திரக் கடவுளையும் விஷ்ணுவையும் வணங்குகிறார்கள்.
பூஜை விழாக்களில் யாகம் மற்றும் விரதம் இருப்பதற்கு இது ஒரு நல்ல நாள் என்று நம்பப்படுகிறது. பூர்ணிமா, அல்லது பௌர்ணமி நாள், சந்திரன் அதன் கதிர்கள் மூலம் கிரகத்திற்கு அதன் ஆசீர்வாதங்களை வழங்கும் நாள்.
இந்த நாள் புனித இடங்களைப் பார்வையிடவும், கங்கையில் குளிக்கவும், விஷ்ணு மற்றும் குரு பிரகஸ்பதிக்கு வழங்கப்படும் எந்த பூஜைகளையும் செய்யவும் ஒரு சிறந்த நாள்.