“அடுத்து சீனா ’இன்னும் சீனா!” சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2023ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழிற்துறை மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் தொழிற்துறை மற்றும் வணிக நண்பர்களின் கூற்றை மேற்கோள் காட்டி, உலகச் சந்தையில் சீனாவின் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
இதனிடையில் சீன ஊடகக் குழுமமும், சீன மக்கள் பல்கலைக்கழமும் இணைந்து நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பில் உலகளவில் சீனா ஒரு முக்கிய நாடு என்னும் கருத்து பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களுள் 90.6 விழுக்காட்டினர் சீனாவுடன் ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது சர்வதேச சமூகத்திற்குப் பொருந்தியது என்னும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தவர்களுள் 84.5 விழுக்காட்டினர் சீனா உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதாரப் பங்கேற்பினைக் கொண்ட நாடு எனவும், 81.9 விழுக்காட்டினர் சீனா வாய்ப்புகள் நிறைந்த நாடு எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 37 பேர் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.