நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

Estimated read time 1 min read

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீபத்தில் சர்ச்சைகளும் சிக்கியது . அது என்னவென்றால் அமரன் படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து உள்ளதாகவும், எனவே, படத்தை தடை செய்ய வேண்டும் என சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இதன் காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, கமல் அலுவலகம் முன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். கமல் உருவபொம்மை எரிப்பு, தியேட்டர்கள் முற்றுகை என போராட்டம் செய்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ஏற்கனவே, அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையத்தில் அதிகாலையில் அமரன் படம் ஓடும் அலங்கார் திரையரங்கின் முன்பகுதியில் இன்று சில மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசி சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்துக்காக இந்த மாதிரி ஒரு சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள்? என எந்த விவரமும் வெளியாகவில்லை.

இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author