‘இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்’: வெளியுறவு அமைச்சர் 

Estimated read time 0 min read

கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டதாலும் மிரட்டப்பட்டதாலும், கனேடிய அமைப்பிலிருந்து எந்த உதவியும் கிட்டாததாலும் தான் கனடாவில் விசா வழங்குவதை இந்தியா இடைநிறுத்த வேண்டி இருந்தது என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author