அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தவிர்க்க உதவியதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
தனது வரி விதிப்பு மற்றும் வர்த்தக ராஜதந்திரம், தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் உட்பட, அமெரிக்காவிற்கு “ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவர” உதவியது என்று அவர் கூறினார்.
“எனக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லையென்றால், ஏழு போர்களில் குறைந்தது நான்கு போர்கள் வெடித்திருக்கும்…..இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பாருங்கள், அவர்கள் அதைத் தொடங்கத் தயாராக இருந்தனர். ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என்று அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பிதற்றல்
