விக்னேஷ் சிவன் இயக்கி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ (LIK) திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதலில் அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், தற்போது டிசம்பர் 18, 2025 அன்று வெளியாகும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான ‘டியூட்’ திரைப்படமும் அதே அக்டோபர் 17 அன்று வெளியாக இருந்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம்.
கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘டியூட்’ படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ வெளியீடு ஒத்திவைப்பு
