மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தீர்மானிப்பதற்கான முக்கிய கூட்டம் நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்காமல், பாஜக வேட்பாளர்களில் ஒரு பகுதியைக் வெளியிட அக்கட்சி விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author