உலகளவில் பிரபலமான வீடியோ பகிர்வு தளமான YouTube, ஜூலை 15, 2025 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள், குறிப்பாக original உள்ளடக்கங்களை ஊக்குவிக்கவும், காப்பி அல்லது மீள உருவாக்கப்பட்ட வீடியோக்களை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Repetitive Video-களுக்கு தடை!
புதிய விதிமுறைகளின்படி, கீழ்காணும் வகை உள்ளடக்கங்கள் இனி YouTube மொனிடைசேஷனுக்குத் தகுதியற்றவையாக கருதப்படும்:
ஒரே மாதிரியில் திரும்பத் திரும்ப உருவாக்கப்படும் வீடியோக்கள்
AI உதவியுடன் script + voice auto generate செய்யப்பட்ட வீடியோக்கள்
ஒரே பிம்பங்கள் மற்றும் இசையை பயன்படுத்தும் slideshow வகை வீடியோக்கள்
வெளிப்படையான கருத்தில்லாமல் edit செய்யப்பட்ட stock-footage வீடியோக்கள்
வேறு ஒருவரது வீடியோவை சற்று மாற்றி மீண்டும் பதிவேற்றும் செயல்
YouTube-வின் முடிவின் பின்னணி
YouTube தெரிவித்ததாவது, “இணையத்தில் தற்போது மிக அதிக அளவில் low-effort அல்லது mass-produced content உருவாகி வருகிறது. இது பார்வையாளர்களுக்குத் தேவையான தரமான, தனித்துவமான தகவல்களை பறிக்கிறது. அதனால்தான் இந்த மாற்றம் அவசியமானது” எனத் தெரிவித்துள்ளது.
யார் பாதிக்கப்படுவார்கள்?
இந்த மாற்றத்தால், ஏற்கனவே YouTube-ல் காப்பி அடிக்கும் அல்லது AI மூலம் வேகமாக வீடியோ உருவாக்கும் சில creators-க்கு monetization முடக்கப்படும்.
இதை YouTube team நேரடியாக மீள ஆய்வு செய்து செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு நன்மை?
சொந்த குரலோடு voice-over கொடுப்பவர்கள்
தனித்துவமான script எழுதும் creators
news, review, knowledge, motivation போன்ற தரமான பயனுள்ள topic-ஐ honest-ஆக கையாளுபவர்கள்
viewers-க்குப் புதிய அனுபவம் தருபவர்கள்
இவர்கள் YouTube-ல் அதிக முக்கியத்துவம் பெற வாய்ப்பு உள்ளது.
Creators-க்கு YouTube சொல்லும் அறிவுரை:
உங்கள் குரலை பயன்படுத்துங்கள்
Copy paste செய்ய வேண்டாம்
AI content-ஐ பயன்படுத்தினாலும், அதில் உங்கள் சிந்தனையைப் சேர்க்க வேண்டும்
Mass production மாதிரி செயல்படாதீர்கள்
Content-க்கு human touch மற்றும் emotion முக்கியம்
முக்கியம்:
ஜூலை 15, 2025 முதல் இந்த விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதன்படி உங்கள் video monetization eligibility ஆனது பாதிக்கப்படலாம். எனவே அனைத்து YouTube creators-ம் உங்கள் உள்ளடக்கங்களை மீளப்பார்த்து, தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
முடிவில்:
YouTube இப்போது quantity-ஐ விட quality-ஐ முக்கியமாகக் கருதுகிறது. உண்மையான சிந்தனை, சொந்த குரல், பயனுள்ள தகவல் கொண்ட video-கள்தான் இனி வெற்றி பெறும். காப்பி வேலைக்கு இனி இடமில்லை!