சீனா மற்றும் ஐரோப்பாவின் முடிவின்படி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வோண்டெர் லெயென் அம்மையார் ஆகியோர் ஜூலை 24ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களைச் சந்தித்துரையாடுவார். மேலும், 25ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கூட்டத்துக்குச் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கும் அவர்களும் கூட்டாகத் தலைமை தாங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.