லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
மேலும் இருவர் காயமடைந்தனர். செய்தி நிறுவனமான PTIயின் படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது.
அந்த மூன்று இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் இருக்கும் மோஷாவ்(கூட்டு விவசாய சமூகம்) என்ற தோட்டத்தை தாக்கியது என்று மீட்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம்(எம்டிஏ) ஜாக்கி ஹெல்லர் தெரிவித்துள்ளார்.