உலகளாவிய மேயர்கள் உரையாடல் மற்றும் 2025ஆம் ஆண்டு ஜிங்தேட்சென் மன்றக்கூட்டம் அக்டோபர் 19ஆம் நாள் சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் ஜிங்தேட்சென் நகரில் துவங்கியது. இத்தாலி, தென் கொரியா, துருக்கி, ரஷியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மேயர்கள், நகரங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பண்பாடு மற்றும் வணிகத் துறையினர்கள் முதலிய 350க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.
தற்போது, நாகரிக உரையாடலை வலுப்படுத்தி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றுவது மிகவும் முக்கியமானது. நாட்டைக் கடந்த உலகளாவிய மொழியான பீங்கான் பாண்டம், பல்வேறு நாகரிகங்களை இணைக்கும் முக்கிய பொருளாக விளங்குகிறது என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தெரிவித்தனர்.
ஜிங்தேட்சென் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் ஹூ க்சுவேமெய் கூறுகையில், பண்பாட்டுப் பரவல், புத்தாக்க வளர்ச்சி, திறப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நகரங்கள் பரிமாற்றத்தை ஆழமாக்கி, வளர்ச்சிக்கான புதிய பாதையைக் கூட்டாக நாடி, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கு, இந்த உரையாடல் துணைப் புரியும் என்றார்.
