இணையத்தளத்தின் புதிய தரவுகளின்படி, விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் சீன விண்வெளி திரைப்படம் ஷேன் ச்சோ 13, செப்டம்பர் 5ம் நாள் திரையிடப்பட்டு, நாடளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அக்டோபர் 20ம் நாள் வரை, ஷேன் ச்சோ 13 திரைப்படம், சீனாவின் பெரு நிலப் பகுதியில் மொத்தம் 5 கோடி யுவான் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தைக் கண்டுகளித்த ரசிகர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
