சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோயிலில் கடந்த 23ஆம் தேதி ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை அடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.