சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானம், நாட்டில் உள்ள 13.4 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.
கஃபாலா முறையின் கீழ், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களை வேலைக்கு அமர்த்திய முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்தனர் – வேலை மாற்றம், நாட்டை விட்டு வெளியேறும் அனுமதி, சட்ட உதவி போன்றவை அனைத்து ஸ்பான்சரின் (கஃபீல்) ஒப்புதலுக்கு உட்பட்டிருந்தது. இதனால் “நவீன அடிமைத்தனம்” எனக் குற்றஞ்சாட்டபட்ட இம்முறை, தொழிலாளர் அடிப்படை சுரண்டலுக்கு வாய்ப்பளித்தது.
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி
