சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

Estimated read time 1 min read

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி திரைத்துறையில் இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலங்களும், சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கும் விருதுகளை வழங்கியது.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு யாரெல்லாம் விருதுகளை வாங்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம்.

சிறந்த திரைப்படம் தமிழ் திரைப்பட விருது – இயக்குனருக்கு (நித்திலன்) வாங்கினார். அவருக்கு ரூ.1.0 லட்சம் மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ.1.0 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

அதைப்போல, அதே பிரிவில் அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆர் மகேந்திரனுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்பட விருது – லப்பர் பந்து படம் சார்பாக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு விருதுடன் ரூ. 50,000 வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாருக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டது.

மேற்கூறிய இரண்டு விருதுகளில் இடம்பெறாத தனிநபருக்கு சிறப்பு ஜூரி விருது: பாரி இளவழகன் படத்திற்காக இயக்குனர்- ஜமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் அவருக்கு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்: மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி விருதுவாங்கினார். அத்துடன் ரூ.50,000 அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

சிறந்த நடிகை : அமரன் படத்தில் நடித்ததற்காக நடிகை சாய்பல்லவி வாங்கினார். அத்துடன் ரூ.50,000 அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளர்: அமரன் படத்திற்காக சிஎச் சாய் விருது வாங்கினார்.அத்துடன் ரூ.50,000 அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் : விருது ஜி.வி. பிரகாஷ் அமரன் படத்துக்கு வாங்கினார்.

சிறந்த எடிட்டர்: விருது பெற்றவர் ரூ.50,000/- மகாராஜா படத்திற்காக பிலோமின் ராஜ்

சிறந்த ஒலிப்பதிவாளர்: விருது பெற்றவருக்கு ரூ.50,000/- (பகிரப்பட்டது) சுரேன் ஜி, அழகியகூத்தன் கொட்டுக்காலி

வாழை திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான விருது பொன்வேல் வாங்கினார்.

சிறந்த நடிகர் : விருது, லப்பர் பந்து படத்திற்காக தினேஷ்

வேட்டையான் படத்துக்காக துஷாரா விஜயனுக்கு துணை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருது.

சிறந்த எழுத்தாளர் விருது – மகாராஜா படத்திற்காக நித்திலன் சாமிநாதன் வாங்கினார்.

சிறந்த கலை இயக்குனருக்கான விருது S.S.மூர்த்தி தங்களன் படத்திற்காக பெற்றுக்கொண்டார்.

சமூக பிரச்சனைகள் குறித்த சிறந்த திரைப்படத்திற்கான விருது – நந்தன் படத்திற்காக ஈரா சரவணன் வாங்கியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு ஜூரி விருது – வாழை படத்திற்காக மாரி செல்வராஜிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குறிப்பு ஜூரி விருது – தங்கலான் படத்திற்காக பா.ரஞ்சித்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author