ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.
மாலத்தீவு நாட்டில் ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மாலத்தீவில் உள்ள வெளிநாட்டு துருப்புக்களின் எண்ணிக்கையை அதிபர் முய்சுவின் அரசாங்கம் வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது என்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.
“100 நாட்களில், இது தெளிவாக தெரிந்துவிட்டது. ‘ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள்’ என்ற அதிபர் முய்சுவின் கூற்றுக்கள் அவர் கூறும் மற்றொரு பொய்.
தற்போதைய நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையை வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது” என்று ஷாஹித் கூறியுள்ளார்.