வந்தவாசி, அக் 24:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் காலை
ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு விசேஷ கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் மங்கல தீப ஆராதனை சேவை நடைபெற்றது. பிற்பகலில் ஹோம பூஜைகள், திருஷ்டி தோஷ நிவாரண பரிகார வேள்வி பூஜையும் நடைபெற்றது. மாலை உற்சவ முத்துமாரி அம்மனுக்கு 32 திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த பூஜை முறைகளை அருட்சக்தி ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்கொண்டார். இரவு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்று மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் மகா அன்னதான வைபவம் நடைபெற்றது.
