ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP  

Estimated read time 1 min read

ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள், முக்கிய மனிதாபிமான உதவி பாதைகளை சீர்குலைத்துள்ளன.
இதனால், உலகின் மிக மோசமான நெருக்கடிகளை சந்திக்கும் சில பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுவது தாமதமாகியுள்ளது.
இந்த மோதல், உலகளாவிய பட்டினியின் அளவை, தற்போதுள்ள 319 மில்லியன் என்ற எண்ணிக்கையை மேலும் அதிகமாக உயர்த்தக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் மதிப்பிடுகிறது.

You May Also Like

More From Author