விமானப் பயணிகளுக்கு இனி ஒரு குட் நியூஸ்! பயணிகள் தங்களுக்குப் பிடித்த இருக்கைகளைத் தேர்வு செய்யும்போது, இனி 60 சதவீத இருக்கைகளுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தேவையற்ற கூடுதல் செலவுகள் இன்றி நிம்மதியாகப் பயணிக்க முடியும்.
அதேபோல், ஒரே டிக்கெட்டில் (PNR) முன்பதிவு செய்து ஒன்றாகப் பயணம் செய்யும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களைப் பிரித்து அமர்த்தக் கூடாது என்றும் புதிய விதியில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் அருகருகே உள்ள இருக்கைகளிலேயே அமர்த்தப்பட வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் இனி உறுதி செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் விமானப் பயணத்தை இன்னும் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
