சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஜூலை 4ஆம் நாள் பாரிஸில் சந்தித்து பேசினார்.
அப்போது மக்ரோன் கூறுகையில், பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளித்தல், சர்வதேச சட்டத்தைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளில், பிரான்ஸும் சீனாவும் பல ஒத்தக் கருத்துக்களை கொண்டுள்ளன.
சீனாவுடன் சர்வதேச பொருளாதாரம், நாணயம், உலக மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் கொள்கை ரீதியிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலகளாவிய அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரான்ஸில் சீனா முதலீட்டை அதிகரித்து, மேலும் சமமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வளர்க்க பிரான்ஸ் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாங்யீ கூறுகையில், பிரான்ஸுடன் இணைந்து இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்தக் கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, அடுத்த கட்ட உயர்நிலை பரிமாற்றத்துக்கு ஆயத்தம் செய்து, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.