“மெலிசா” சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய சூறாவளி மையம் (NHC), சூறாவளியின் குறைந்தபட்ச மைய அழுத்தம் திங்கள்கிழமை மாலை 909 மில்லிபாரிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 901 மில்லிபாராக குறைந்ததை உறுதிப்படுத்தியது.
இதனால் “மெலிசா” சூறாவளி “கத்ரீனா”வை விட மிகவும் தீவிரமானது என கூறப்படுகிறது.
இதன் குறைந்தபட்ச அழுத்தம் 902MB ஆகும்.
