சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பிற்கான மேம்பாட்டு உடன்படிக்கை அக்டோபர் 28ஆம் நாள் மலேசியாவின் கோலாலம்பூரில் கையொப்பமிடப்பட்டது.
எண்ணியல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம், விநியோக சங்கிலியின் இணைப்பு, தொழில்நுட்ப சட்ட விதிகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார நடவடிக்கை, சுங்கத் துறை நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதிமயமாக்கம், போட்டியாற்றல் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பு, பொருளாதாரத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முதலிய 9 துறைகள் இவ்வுடன்படிக்கையில் அடங்கியுள்ளன.
