தேவர் ஜெயந்தி சந்திப்பு, செங்கோட்டையன் நீக்கம் எதிரொலியாக வருகின்ற 5ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது, சசிகலா-ஓபிஎஸ்-டிடிவி-செங்கோட்டையன் சந்தித்ததும், அதனைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
