உலக சீனத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 3ஆம் நாள் மக்கௌவில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹுநாங் இம்மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இச்செய்தியில், உலகளாவிய சீனத் தொழில் முனைவோர்கள் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியிலும், சோஷலிச நவீனமயமாக்கக் கட்டுமானத்திலும் ஆக்கமுடன் பங்கெடுத்து, சீனாவின் சிறந்த பாரம்பரிய பண்பாடுகளை வெளிக்கொணர்ந்து, சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, சீன-வெளிநாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகம், மானுடவியல் பரிமாற்றம் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றினர் என்றார்.
மேலும், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை சீனா உறுதியுடன் விரிவுப்படுத்தி, சீனாவின் புதிய வளர்ச்சியின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்கி, சீன நவீனமயமாகத்துடன் பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றும். பரந்துபட்ட சீனத் தொழில் முனைவோர்கள் மேம்பாடுகளை வெளிக்கொணர்ந்து, வாய்ப்புகளைக் கடைப்பிடித்து, சீன-வெளிநாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றம், மானுடவியல் பகிர்வு உள்ளிட்ட துறைகளில் தனிச்சிறப்புடன் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
