இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிபர ஆணையங்களின் தரவுகள் சுவாரஸ்யமானத் தகவலை வெளியிட்டுள்ளன.
உலகளவில், இந்திய ஆண்கள் சராசரியாக 30 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். இது ஐரோப்பிய நாடுகளின் 35 முதல் 40 வயது சராசரியை விடக் குறைவாகவும், தெற்காசியப் பிராந்தியத்தில் சற்று அதிகமாகவும் உள்ளது.
இந்தியாவில் 2000ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த ஆண்களின் சராசரி திருமண வயது, தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணங்களாக உயர்கல்வி, தொழில் வளர்ச்சி, நகர்ப்புறமயமாக்கல், பெண்களின் வேலைவாய்ப்பு உயர்வு மற்றும் சமூகப் பார்வை மாற்றம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
