சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 29ஆம் நாள் செங்து நகரில் நேபாள வெளியுறவு அமைச்சர் அர்சு ராணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், 2019ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நேபாளத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இரு தரப்பின் கூட்டு முயற்சியில், இரு நாட்டின் ஒத்துழைப்புகள் பன்முகமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டு கட்டுமானத்திலும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இமயமலை கடந்த முப்பரிமான தொடர்பு மற்றும் இணைப்பு வலைப்பின்னலின் கட்டுமானமும் மேலும் ஆழமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேபாளமுடன் இணைந்து, சீன-நேபாள உறவின் புதிய எதிர்காலத்தைப் படைக்க நாங்கள் விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.
ஒரே சீனா எனும் கொள்கையில் நேபாளம் உறுதியாக ஊன்றி நின்று, எந்த சக்தியும் நேபாளத்தின் உரிமைப் பிரதேசத்தைப் பயன்படுத்தி சீனாவின் நன்மையைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்காது என்று அர்சு ராணா கூறினார்.
மேலும், மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைப்பதென்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவை நேபாளம் வெகுவாகப் பாராட்டி உலக வளர்ச்சி முன்னெடுப்பில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.