பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக பெண் தொண்டர்களுடன் நமோ செயலிமூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், பீகார் சட்டமன்ற தேர்தலை தான் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காட்டாட்சி நடத்தியவர்களைப் படுதோல்வி அடைய செய்வதை பெண் வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பீகாரில் இரண்டு இளவரசர்கள் உலா வருவதாக விமர்சித்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் பீகார் வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author