புதிய சட்டப் புரட்சி: கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும்  

Estimated read time 1 min read

இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை மீறினால், அந்த கைது சட்டவிரோதமாகும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த விதி, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) அல்லது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) உட்பட, நாட்டில் உள்ள அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும்.
கைதுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்வது என்பது அரசியலமைப்புச் சட்டம் 22(1)-ன் கீழ் உள்ள அடிப்படை உரிமை ஆகும்.
இது வெறும் நடைமுறை சடங்கு அல்ல என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author